×

முப்பெரும் விழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் பெரியநாயகி உடனுறை வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில் 1000வது ஆண்டு நிறைவு பெருவிழா, கோயிலை கட்டிய ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. இதையொட்டி கோயிலில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர்,  சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.தொடர்ந்து நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில், தொண்டைமண்டல ஆதீனம் 233வது பட்டம் திருச்சிற்றம்பல தேசிகர் ஞானபிரகாச பரமாச்சாரி சுவாமிகள் தலைமை தாங்கி, எழுத்தாளர் மனோகரன் எழுதிய “கங்கை கொண்டானுக்கு கங்கை நீராட்டு” புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு நூலினை பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், குமார், ஒன்றிய கவுன்சிலர் சுகுணா சுந்தர்ராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் ராதா நடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, உத்திரமேரூர் ஷிவாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி, சிலம்பாட்டம் உள்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதல் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது….

The post முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Uthramerur ,Periyanaiaki ,Udanurai ,Vanasundereswarar ,Manampathi ,Mupperum festival ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை