×

அண்ணாமலை தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடிய எஸ்.வி.சேகர்

சென்னை, ஜூன் 8: பாஜவில் அண்ணாமலையால் பல மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அதில் கே.டி.ராகவன், நடிகை காயத்ரி ரகுராம், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் என்று பலரை கூறலாம். அதில் எச்.ராஜா மட்டும் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறார். அதேநேரத்தில் எஸ்.வி.சேகர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பேசி வருகிறார். அதன் ஒருகட்டமாக தேர்தலுக்கு முன்னர் அண்ணாமலை தோல்வியடைவார் என்று கூறினார். தமிழகம் முழுவதும் பாஜ தோற்கும். அதற்கு அண்ணாமலையும், அவரது தவறான முடிவுகளுமே காரணம் என்று கூறியிருந்தார். அதற்கு ஏற்றார்போல அண்ணாமலை தோல்வியடைந்தார். பாஜவும் படுதோல்வி அடைந்தது. 21 இடங்களில் பாஜ மற்றும் கூட்டணிக் கட்சிகள் டெபாசிட் இழந்தன. இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர், தமிழகத்தில் பாஜவும், அண்ணாமலையும் தோல்வி அடைந்ததற்காக தனது வீட்டு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடி உள்ளார். இதை வீடியோ எடுத்து தனது வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

The post அண்ணாமலை தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடிய எஸ்.வி.சேகர் appeared first on Dinakaran.

Tags : SV Shekhar ,Annamalai ,CHENNAI ,BJP ,KT Raghavan ,Gayatri Raghuram ,H. Raja ,H.Raja ,
× RELATED தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும்...