×

பெரும்புதூர் தொகுதியில் நன்றி தெரிவிக்கும் கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 8: காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் டி.ஆர்.பாலு 4,87,029, வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரை வெற்றிபெற வைத்த, பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் நாளை மறுநாள் (9ம்தேதி) முதல் வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, மாவட்டத்திற்கு உட்பட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் வாரியாக பெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, ஊர் ஊராக சென்று நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post பெரும்புதூர் தொகுதியில் நன்றி தெரிவிக்கும் கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Perumbudur Constituency ,Minister Tha.Mo.Anparasan. ,Kanchipuram ,Kanchipuram district ,Kazhagam ,DR.Palu ,India ,Perumbudur Parliamentary Constituency ,Constituency ,Minister ,Tha.Mo.Anparasan ,Dinakaran ,
× RELATED ரேஷன் கார்டு குறைதீர் முகாம்