×

இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம்

நெல்லை, ஜூன் 8: நெல்லையில் இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம், வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளதாக துணை இயக்குநர் அருண் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்லை இஎஸ்ஐ துணை இயக்குநர் அருண் வெளியிட்ட அறிக்கை: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐ) நெல்லை துணை மண்டலம் சார்பில் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறை தீர்க்கும் முகாம், வருகிற 12ம் தேதி மாலை 4 மணிக்கு இஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் இஎஸ்ஐசி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இஎஸ்ஐ திட்ட மருந்தக அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பயனீட்டாளர்கள் குறைகள் ஏதேனும் இருப்பின் முகாமில் கலந்து கொண்டு தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : ESI ,Camp ,Nellai ,Deputy Director ,Arun ,Labor Government Insurance Corporation ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்