×

நோய் மேலாண்மை குறித்து இலவச பயிற்சி

நாமக்கல், ஜூன் 8: மரவள்ளி பயிரில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து, நாமக்கல்லில் 12ம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மரவள்ளியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த ஒருநாள் இலவச பயிற்சி, வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பயிற்சியில் மரவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும் கட்டுப்படுத்தும் முறைகள், உழவியல் முறை, கைவினை முறை, உயிரியியல் முறை, இயற்கை முறை, ராசாயன முறை மற்றும் வளர்ச்சியூக்கிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற, தேவையான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

The post நோய் மேலாண்மை குறித்து இலவச பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Maravalli ,Namakkal Agricultural Science Institute ,Dinakaran ,
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...