×

அலையில் சிக்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி

புவனகிரி, ஜூன் 8: பரங்கிப்பேட்டை அருகே உள்ள மஞ்சகுழி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன்(22). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் தமிழ் மற்றும் சந்தோஷ் ஆகியோருடன் சாமியார்பேட்டை கடலில் குளித்துள்ளார். அப்போது அன்பரசன் திடீரென சுழலில் சிக்கியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி, பு.முட்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அலையில் சிக்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : wave Bhubaneswar ,Anbarasan ,Manjakuzhi ,Parangippet ,Cuddalore ,
× RELATED கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே...