×

ஆந்திர முதல்வராக சந்திரபாபு வரும் 12ம் தேதி பதவியேற்பு

திருமலை: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு வரும் 12ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு வரும் 12ம் தேதி காலை 11.27 மணிக்கு பதவியேற்க உள்ளார். இதற்காக கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி ஐடி பூங்கா மைதானத்தில் சந்திரபாபு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதால் அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை தயார் செய்யும் பணியில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஆந்திர முதல்வராக சந்திரபாபு வரும் 12ம் தேதி பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Chief Minister of ,Andhra Pradesh ,Tirumala ,Chandrababu Naidu ,Andhra ,Pradesh ,Chief Minister of Andhra Pradesh ,Krishna ,Chief Minister ,
× RELATED ஆந்திராவில் சுரங்கம், கனிமவளத்துறை...