×

பாஜவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்: சச்சின் பைலட் கருத்து

ஜெய்ப்பூர்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் கூறுகையில், ‘‘அரசியல் என்பது கொள்கைகள், அரசியலமைப்பு, முன்னேற்றம், வளர்ச்சி, திட்டமிடல், தொழில் மற்றும் முதலீடு ஆகும். ஆனால் பாஜ செய்யும் அரசியலானது மாங்கல்யம், இந்து, முஸ்லிம் கோயில்-மசூதி என்பதாகும். இளம் தலைமுறையினர் மற்றும் பெரும்பாலான மக்களுக்கு இது பிடிக்கவில்லை. இதனை பாஜ புரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ” என்றார்.

The post பாஜவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்: சச்சின் பைலட் கருத்து appeared first on Dinakaran.

Tags : BJP ,Sachin Pilot ,Jaipur ,Former Deputy Chief Minister ,Lok Sabha elections ,Congress ,chief minister ,Jaipur, Rajasthan ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...