×

தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வருங்காலத்திலும் அதே உத்வேகத்துடன் நமது அரசு இயங்கும். நாட்டை 3ஆவது முறையாக வழிநடத்த எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்பதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் இருக்கைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி அரசு நாளை மறுநாள் (ஜூன் 9) மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்க உள்ளது. மோடியுடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

மூன்றாவது முறையாக சேவை செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்ததையடுத்து, குடியரசு தலைவர் மாளிகை வெளியே செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய மோடி, “தேசிய ஜனநாயக கூட்டணியால் வலுவான, நிலையான அரசு அமைக்கப்படும்” என உறுதிபட தெரிவித்துள்ளார்.

“நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்” தொடர்ந்து பேசிய அவர், “இந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா உலகிற்கு விஸ்வபந்துவாக (உலகின் நண்பர்) உருவெடுத்துள்ளது. அதனால் ஏற்படும் அதிகபட்ச நன்மை இப்போது தெரிய தொடங்குகியுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகள், உலகளாவிய சூழலில் இந்தியாவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

The post தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Delhi ,Shri Narendra Modi ,NDP ,
× RELATED சர்வதேச யோகா தினம்.. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பங்கேற்பு..!!