×

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதி கொண்டதால் பரபரப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இரண்டு தரப்பினரும் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ராஜேஷ் என்பவர் கொல்லப்பட்டியில் உள்ள 23சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தார். அந்த நிலத்திற்கு அவர் உரிமை கூறிவரும் நிலையில் நிலத்தின் உரிமையாளரான அவரது உறவினர் வேலுசாமி என்பவரும் தனது ஆதரவாளர்களுடன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது இரண்டு தரப்பினருக்கும் நிலம் தொடர்பாக கடும் வாக்குவாதம் எழவே ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதை அடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வந்திருந்த பொது மக்கள் மோதலில் ஈடுபட்ட இருவரையும் தடுத்து விலக்கி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

The post திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதி கொண்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul Vedasandur ,Dindigul ,Vedasandur ,Dindigul district ,Rajesh ,Kujiliamparai Deed Office ,Khilili ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு