×

கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கல்வி நிதி வழங்குதல்

 

ராமநாதபுரம், ஜூன் 7: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள வெங்கிட்டங்குறிச்சி மற்றும் பாம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கூட்டுறவு வளர்ச்சி மற்றும் கல்வி நிதி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாட்சியர் ரூபினி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ஜினுவிடம் 2021-22ம் ஆண்டிற்கான லாப பிரிவினையில் 5% தொகையினை கூட்டுறவு வளர்ச்சி மற்றும் கல்வி நிதியாக வழங்கினார். அப்போது பரமக்குடி சரக துணைப்பதிவாளர் ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் மீனாட்சி சுந்தரேஸ்வரன், கூட்டுறவு ஒன்றிய மேலாளர் மற்றும் சங்கத்தின் செயலாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

The post கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கல்வி நிதி வழங்குதல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Venkitangurichi ,Bampur Primary Agriculture Cooperative Credit Union ,Paramakkudy Circle, Ramanathapuram District ,Rupini ,
× RELATED நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என...