×

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு

 

ஊட்டி, ஜூன் 7: 15 வயதிற்கு மேற்பட்ட சுமார் 80 வயது வரைக்கும், பள்ளியில் இது நாள் வரை சேராதவர்களும் பயன் பெறும் வகையில் தமிழக அரசு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 100 சதவீதம் எழுத்தறிவு பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதன், தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் கற்போரை கணக்கெடுப்பு மூலம் கண்டறியவும் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் வழிக்காட்டுதலில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன், பொறுப்பாளர்கள் சந்தோஷ், ராஜ்குமார், சத்யா, ஹேரி உத்தம் சிங், கடசோலை தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் ஆகியோர் செடிக்கல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று 27 கற்போரையும் தன்னார்வலர்கள் சிவரஞ்ஜினி, சரண்யா ஆகியோர் வழிகாட்டுதல் வழங்கினர்.

The post புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...