×

கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 

கோவை, ஜூன் 7: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 10ம் தேதி துவங்குகிறது. மேலும், முகூர்த்த நாள்கள், வார இறுதி நாட்கள் காரணமான பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். எனவே, பயணிகளின் சிரமத்தை குறைக்க சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி நாளை (8ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப்பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என கோவை மண்டல தமிழ்நாடு அரசு பேருந்து கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்