×

அரசின் ஜீவன் ரக்க்ஷா விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 

திருவாரூர், ஜூன் 7: திருவாரூர் மாவட்டத்தில் அரசின் ஜீவன் ரக்க்ஷா விருதிற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய அரசின் சார்பில் பவ்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் பிரிவுகளில் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி சர்வேத்தம் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதானது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கும், உத்தம் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதனாது – துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கும், ஜீவன் ரக்க்ஷா பதக்கமானது- தனக்கு காயம் ஏற்படினும் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கும் வழங்கப்படும். மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விபரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தள முகவரியான www.awards.gov.in ல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். 2024ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், திருவாரூர் என்ற மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது அலுவலக வேலை நாட்களில் நேரிலோ வரும் 30ம் தேதி-க்குள் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 04366290620 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post அரசின் ஜீவன் ரக்க்ஷா விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Govt ,Tiruvarur ,Sarusree ,Government of India ,
× RELATED 8 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு...