×

வயலில் புல் அறுத்த விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது

 

தா.பழூர், ஜூன் 7: தா.பழூர் அருகே வயலில் புல்அறுத்த விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயங்கோட்டை காலனி தெருவை சேர்ந்த ராமசாமி மகன் அம்மாசி (62). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை ஆடு, மாடுகளுக்கு புல் அறுக்க அமிர்தராயங்கோட்டை – தேவமங்கலம் செல்லும் பாதையில் உள்ள சுந்தரவேல் என்பவருக்கு சொந்தமான வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சுந்தரவேல் மகன் முருகானந்தம் (42) ஏன் என் வீட்டு வயலில் புல் அறுக்கிறீர்கள் என கேட்டு அம்மாசி கையில் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி இடது பக்க காதுக்கு கீழ் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த அம்மாசியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவரது மனைவி ரத்தினாம்பாள் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரவேல் மகன் முருகானந்தத்தை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வயலில் புல் அறுத்த விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tha.Pazhur ,Ammasi ,Ramaswamy ,Amirtarayangottai Colony Street ,Tha.Pazur, Ariyalur District ,
× RELATED தா.பழூரில் விவசாய தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை கூட்டம்