×

உ.பியில் 16 தொகுதியில் வெல்ல பாஜவுக்கு கைகொடுத்த மாயாவதி: வாக்குகளை பிரித்து வெற்றிக்கு உதவியது அம்பலம்

புதுடெல்லி: உ.பியில் 16 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று பாஜவின் வெற்றிக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உதவியுள்ளது தெரியவந்துள்ளது. உ.பியில் உள்ள 80 தொகுதிகளில், பாஜ தற்போது 33 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஆர்எல்டி 2 இடத்திலும், அப்னா தள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது 36 தொகுதிகள் மட்டுமே பாஜ கூட்டணிக்கு கிடைத்துள்ளது. 43 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியது.

இந்த நிலையில் 16 தொகுதிகளில் பாஜ கூட்டணியின் வெற்றிக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உதவியுள்ளது அம்பலமாகி உள்ளது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 9.39 சதவீத வாக்குகள் கிடைத்தாலும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. கடந்த 2014ல் 19.77 சதவீத வாக்குகளையும், 2019ல் 19.42 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்த பகுஜன் கட்சிக்கு இது மிகப்பெரிய சரிவாகும். ஆனால், அதே நேரத்தில் பாஜவும், அதன் கூட்டணி கட்சிகளும் வென்ற 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்குவித்தியாசத்தைவிட அதிக வாக்குகளை பகுஜன் கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

இதன் மூலம், அக்பர்பூர், அலிகார், அம்ரோஹா, பான்ஸ்கான், படோஹி, பிஜ்னோர், தியோரியா, ஃபரூக்காபாத், ஃபதேபூர் சிக்ரி, ஹர்தோய், மீரட், மிர்சாபூர், மிஸ்ரிக், புல்பூர், ஷாஜஹான்பூர், உன்னாவ் ஆகிய 16 தொகுதிகளிலும் பாஜவின் வெற்றிக்கு பகுஜன் கட்சி உதவியுள்ளது. இந்தியா கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்திருந்தால் இந்த 16 தொகுதிகளும் எதிரக்கட்சிகளுக்கு கிடைத்திருக்கும்.

பகுஜன் உதவி கிடைத்ததிருக்காவிட்டால் பாஜவுக்கு வெறும் 19 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு வெறும் ஒரு தொகுதி என கூட்டணிக்கே 20 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கும். நாடு முழுவதும் தே.ஜ கூட்டணிக்கு 276 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கும். பாஜவின் தனிப்பட்ட பலம் 226 ஆக குறைந்திருக்கும். இதன் மூலம் பாஜ ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post உ.பியில் 16 தொகுதியில் வெல்ல பாஜவுக்கு கைகொடுத்த மாயாவதி: வாக்குகளை பிரித்து வெற்றிக்கு உதவியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : U. Mayawati ,Bajaj ,Ambalam ,New Delhi ,U. ,Mayawati ,Bagajan Samaj Party ,BJP ,B, Baja ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தனி நபர்கள் அதிக செலவு...