×

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி மர்மச்சாவு போலீசார் விசாரணை கலசபாக்கம் அருகே

கலசபாக்கம், ஜூன் 7: கலசபாக்கம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலசபாக்கம் அடுத்த எர்ணாமங்கலம் ஊராட்சி, மதுரா பானாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனக்கோட்டி மனைவி செல்லம்மாள்(60). கணவர் தனக்கோட்டி ஓய்வு பெற்ற விஏஓ. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே, செல்லம்மாள் மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்தார். அவரது மகன்கள் பாலமுருகன் பெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் பதிவறை எழுத்தர் பணியிலும், மற்றொரு மகன் விக்ரம் காஞ்சிபுரத்தில் எலக்ட்ரீஷியன் வேலையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை மூதாட்டி செல்லம்மாள் அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மூதாட்டி செல்லம்மாள் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி மர்மச்சாவு போலீசார் விசாரணை கலசபாக்கம் அருகே appeared first on Dinakaran.

Tags : Marmachau police ,Kalasapakkam ,Thanakotti ,Chellammal ,Panampattu ,Mathura, Ernamangalam Panchayat ,Dhanakotti ,Marmachavu police ,
× RELATED கலசப்பாக்கம் அருகே பரபரப்பு...