×

இடி மின்னலுடன் பலத்த மழை

நாமக்கல், ஜூன் 7: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று இரவு பலத்தமழை பெய்தது. நாமக்கல் நகரில் நேற்று மாலை 5.30 மணிக்கு இடி மின்னலுடன், பெய்ய தொடங்கிய மழை இரவு 10 மணியை தாண்டியும் நீடித்தது. இதனால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டுனர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நகரில் மின் தடை ஏற்பட்டது. இது போல மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்த நிலையில், நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை 6 மணி வரை, மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): எருமப்பட்டி 2, மங்களபுரம் 5, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 36, சேந்தமங்கலம் 2, கொல்லிமலை 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

The post இடி மின்னலுடன் பலத்த மழை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal district ,Dinakaran ,
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...