×

தொழிலாளி மாயம்

கிருஷ்ணகிரி, ஜூன் 7: தர்மபுரி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சிவா (40), கட்டிட தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி தீர்த்தம் செல்லும் சாலையில், பந்தலூர் பகுதியில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அங்கே போடப்பட்டு இருந்த ஷெட்டில் தங்கியிருந்தார். கடந்த 2ம் தேதி அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சிவா, மீண்டும் திரும்பவில்லை. இதனால் அவருடன் பணியாற்றுபவர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. அவரது குடும்பத்தினரிடம் விசாரித்த போதும், அவர் அங்கேயும் செல்லாதது தெரியவந்தது. இதுபற்றி சிவாவுடன் பணியாற்றும், தர்மபுரி மன்னர்கொட்டாய் பகுதியை சேர்ந்த பரமசிவம்(22) என்பவர், குருபரப்பள்ளி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Siva ,Dharmapuri Kamaraj Street ,Bandalur ,Krishnagiri district ,Guruparapalli Theertham ,Mayam ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு 2 பெண்கள் கைது