×

அருமையான கொத்துக்கறி மசாலா

தேவையானவை:

கொத்துக்கறி – 500 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 2
கொத்தமல்லித் தழை – 2 டேபிள் ஸ்பூன்
புதினா இலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 5
பிரிஞ்சி இலை – ஒன்று
பட்டை – ஒரு சிறு துண்டு
அன்னாசிப்பூ – 1
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்

செய்முறை:.

கொத்துக்கறியை தண்ணீரில் அலசி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, நீளமாகக் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். கொத்தமல்லித் தழை, புதினா இலைகளையும் சேர்த்து இலைகள் சுருங்கும் வரை வதக்கவும். தேவையான உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். வதக்கிய கலவையுடன் கொத்துக்கறியைச் சேர்த்து நன்றாகக் கிளறி, 2 நிமிடங்கள் வதக்கவும். 2 கப் தண்ணீர் விட்டு குக்கர் மூடி, வெயிட் போட்டு, 12 நிமிடங்கள் சிறுதீயில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து பார்த்து, தண்ணீர் அதிகம் இருந்தால் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கிரேவியாக வந்ததும் இறக்கி சூடாகப் பரிமாறவும். பரோட்டா, சப்பாத்தி, பூரி, தோசை, சாதம் என அனைத்துக்கும் ஏற்ற சுவையான சைட்டிஷ் இது.

 

The post அருமையான கொத்துக்கறி மசாலா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள்