×

தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக அமைச்சர் அறிவிப்பு

கர்நாடகா: தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக அமைச்சர் பி.ராகவேந்திரா அறிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொடர்பு என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் ராகவேந்திரா முடிவு செய்துள்ளார். எஸ்டி வளர்ச்சிக் கழக ஊழல் வழக்கில் சிக்கிய பாஜக, சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்தி வருகிறது.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சித்தராமையா முதல்வரானார். டிகே சிவக்குமார் துணை முதல்வரானார். சித்தராமையாவின் அமைச்சரவையில் நாகேந்திரா என்பவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த 26ம் தேதி கர்நாடகா மகரிஷி வால்மிகி பழங்குடியின வளர்ச்சி வாரியத்தின் அக்கவுண்ட் சூப்பிரண்டு சந்திரசேகரன் திடீரென்று தற்கொலை செய்தார். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

சந்திரசேகரன் எழுதிய கடிதத்தில், ‛‛கர்நாடகா மகரிஷி வால்மிகி பழங்குடியின வளர்ச்சி வாரியத்தின் ரூ.94.73 கோடியை இன்னொரு அக்கவுண்ட்டுக்கு மாற்ற வைத்தனர். நிர்வாக இயக்குனர் பத்மநாபா, அக்கவுண்ட் ஆபிசர் பரசுராம், துரகன்னாவர், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் முதன்மை மேலாளர் சுஷிமிதா ஆகியோர் பணத்தை மாற்ற கட்டாயப்படுத்தினர்” என தெரிவித்தார். இதையடுத்து பத்மநாபா, பரசுராம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தான் பாஜக தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது இந்த முறைகேட்டில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திராவுக்கு தொடர்பு உள்ளது. அவரது உத்தரவின்பேரில் தான் இந்த முறைகேடு நடந்துள்ளது. தெலுங்கானா லோக்சபா தேர்தலுக்காக இந்த பணம் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது. நாகேந்திராவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

இதனால் நாகேந்திராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நாகேந்திரா விவகாரம் தொடர்பாக நேற்று முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது நாகேந்திராவை ராஜினாமா செய்ய வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி சித்தராமையா, நாகேந்திராவிடம் கூறியுள்ளார். வழக்கில் நிரபராதியான பிறகு மீண்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்வதாகவும் சித்தராமையா உறுதியளித்தவுடன் மட்டுமே நாகேந்திரன் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார்

The post தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Minister ,P. Raghavendra ,Raghavendra ,BJP ,CBI ,ST Development Corporation ,Dinakaran ,
× RELATED கர்நாடக அரசு முறையாக காவிரி நீரை...