×

அமெரிக்காவில் பயங்கர சூறாவளிக்கு 50 பேர் பலி: பல கட்டிடங்கள் இடிந்து நாசம்

டென்னசி: அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் வீசிய சூறாவளியால் ஏராளமான கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து நாசமாகின. கென்டக்கி மாகாணத்தில் தொழிற்சாலை கட்டிடம் இடிந்ததில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் ஆர்கன்சஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி, மிசோரி மற்றும் டென்னசி மாகாணங்களில் பயங்கர சூறாவளி தாக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூறாவளி தாக்கும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலையில் பல பகுதிகளை சூறாவளி தாக்கியது. அப்போது இடி, மின்னலுடன் பலத்த சுழல் காற்று வீசியது. கென்டக்கியின் மேபீல்டு பகுதி மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அங்கு பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று முற்றிலும் இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் தொழிற்சாலைக்கும் 110 ஊழியர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ள மாகாண ஆளுநர் ஆண்டி பெஷ்ஷிர், உயிரிழப்பு 70 முதல் 100 வரை இருக்கலாம் என அஞ்சப்படுவதாக கூறி உள்ளார். அங்கு சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடக்கிறது.இன்னினாய்ஸின் எட்வர்ட்ஸ்வில்லி பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தின் குடோன் பக்கவாட்டு சுவர் இடிந்து மேற்கூரை சரிந்தது. அங்கும் பல ஊழியர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 100 அவசர வாகனங்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. டென்னசி மகாணத்தில் சூறாவளியால் 3 பேர் இறந்துள்ளனர். ஆர்கன்சஸ் மாகாணத்தில் மருத்துவமனை கிளினிக் கட்டிடம் இடிந்ததில் ஒருவர் பலியாகி உள்ளார். 20 பேர் சிக்கி உள்ளனர். மிசோரி உள்ளிட்ட மேற்கண்ட 5 மாகாணங்களில் சூறாவளியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து மின்சாரம் வழங்குதல் மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post அமெரிக்காவில் பயங்கர சூறாவளிக்கு 50 பேர் பலி: பல கட்டிடங்கள் இடிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : United States ,Tennessee ,Kentucky ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா பேஷன் ஷோ 2024..!!