×

சிறுமியை கடத்திய கண்டக்டர் கைது: ரயிலில் மடக்கிய போலீஸ்

வேதாரண்யம்: சிறுமியை கடத்திய கண்டக்டரை ரயிலில் மடக்கி போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை தில்லைவிளாகத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டரான பாலசுப்பிரமணியன்(31) கடத்தி சென்று விட்டதாக வேதாரண்யம் போலீசில் பெண்ணின் தந்தை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பெண்ணை பாலசுப்பிரமணியன் கடத்தி சென்றாரா அல்லது இருவரும் காதலித்து ஊரை விட்டு சென்றார்களா என்று விசாரித்தனர். அதில், ஈரோடு அருகே ரயிலில் இருவரும் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரயில்வே போலீசார், ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது சோதனை நடத்தி 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் வேதாரண்யம் போலீசார் ஈரோடு சென்று சிறுமி, பாலசுப்பிரமணியை அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.

The post சிறுமியை கடத்திய கண்டக்டர் கைது: ரயிலில் மடக்கிய போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Vedaranyam police ,Nagai district ,Balasubramanian ,Thillavilagat.… ,
× RELATED வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு