×

ஏரல் அருகே சிவகளையில் மெயின் ரோட்டை ஆக்கிரமிக்கும் முட்செடிகளால் விபத்து அபாயம்

ஏரல், ஜூன் 6: சிவகளையில் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து வரும் முட்செடிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரல் அருகே சிவகளையில் இருந்து பேட்மாநகரம் செல்லும் மெயின் ரோட்டில் சிவகளை மேலக்குளம் அடுத்துள்ள மிகப்பெரிய வளைவு பாதை அருகே சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்செடிகள் ரோட்டை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் இப்பாதையில் எதிரே வரும் மற்றொரு வாகனத்திற்கு வழி விட முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இந்த முட்செடிகள் சாலையில் பஸ்சில் ஜன்னல் பக்கத்தில் இருப்பவர்களின் சட்டைகளை கிழித்தும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்களை குத்தி கிழித்தும் வருகிறது. சாலையை ஆக்கிரமிக்கும் முட்செடிகளால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாததால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. எனவே பெரிய அளவில் விபத்து ஏதும் ஏற்படுவதற்குள் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் சிவகளை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏரல் அருகே சிவகளையில் மெயின் ரோட்டை ஆக்கிரமிக்கும் முட்செடிகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Sivagala ,Aral ,Dinakaran ,
× RELATED ஆரல்வாய்மொழியில் மலை மேல் உள்ள முருகன் கோயிலில் சிக்கிய 40 பக்தர்கள்