×

விவசாயிகள் வலியுறுத்தல் தஞ்சாவூரில் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூர், ஜூன் 6: தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார். தஞ்சாவூர் கோரிக்குளம் புதுத் தெருவை சேர்ந்தவர் காளயர். இவருடைய தாயார் சரஸ்வதி (60). இவர் நேற்றுமுன்தினம் வெற்றிலை வாங்க கடைக்கு செல்வதற்காக விளார் புறவழிச்சாலையில் உள்ள வெட்டிக்காடு பாலம் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சரஸ்வதி மீது மோதியதில் தூக்கிவீசப் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காளயர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விவசாயிகள் வலியுறுத்தல் தஞ்சாவூரில் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kalayar ,Thanjavur Korikulam Pudu Street ,Saraswati ,Vetikadu ,Vilar Bypass ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...