×

காரைக்காலில் தெருநாய் கடித்து 4 பேர் காயம்

காரைக்கால், ஜூன் 6: காரைக்காலில் தெருநாய் கடித்து 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் காரைக்காலில் அமைந்துள்ள அரசு பொது தலைமை மருத்துவமனையில் நாய்களால் தொல்லை அதிகமாக இருக்கிறது. செவிலியர்கள் அறை,நோயாளிகள் படுகைகளில் படுத்து உறங்கி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம், நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிகின்ற இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் என நால்வரை மருத்துவமனையில் சுற்றித் திரிகின்ற நாய்கள் கடித்து நான்கு பேரும் அதே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post காரைக்காலில் தெருநாய் கடித்து 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Government General Hospital ,
× RELATED காரைக்காலில் வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை!!