×

கல்லூரி மாணவி தற்கொலை

சேலம், ஜூன் 6: சேலம் அழகாபுரம் சண்முகம் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். லாண்டரிகடை வைத்துள்ளார். இவரது மகள் பொற்செல்வி(20) பிஎஸ்சி நர்சிங் 2ம்ஆண்டுபடித்து வந்தார். கல்லூரியில் இருந்து திரும்பி வந்ததும், செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். சொல்பேச்சு கேட்காததால் தாய் அவரிடம் பேசவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனக்கவலையுடன் இருந்த பொற்செல்வி, நேற்று மாலை வீட்டின் அறைக்குள் சென்று கதவை திறக்கவில்லை. நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர் தாயின் சேலையில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கண்ணீர் வீட்டு கதறி அழுதனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Venkatesh ,Shanmugam Nagar, Alaghapuram, Salem ,Porselvi ,
× RELATED சேலம் மாநகர் முழுவதும் ₹135 கோடியில் சாக்கடை கால்வாய்கள் சீரமைப்பு