×

கல்லூரி மாணவி தற்கொலை

தர்மபுரி, ஜூன் 6: தர்மபுரி டேக்கிஷ்பேட்டை பாபா தெருவை சேர்ந்தவர் பிரபு (29). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி செவ்வந்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய பிரபுவுக்கு காலில் உள்ள 4 விரல்கள் அகற்றப்பட்டது. இதனால் அவர் அடிக்கடி கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதேபோல் தர்மபுரி மாவட்டம் அரூர் பாரதி நகரை சேர்ந்த அய்யப்பன் மகள் சந்தியா (19). இவர் காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். அடிக்கடி செல்போன் பேசி வந்ததால், அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Prabhu ,Baba Street, ,Dagishpet, ,Shevanti ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு