×

பிஎஸ்பியை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை: மாயாவதி வேதனை

லக்னோ: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உபி.யில் கூட்டணி எதுவும் இன்றி தனித்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து,பிஎஸ்பி தலைவர் மாயாவதி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், பிஎஸ்பி கட்சியின் வளர்ச்சியில் முஸ்லிம்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். கடந்த தேர்தல்களை போல் நடந்து முடிந்த தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்கள் கட்சியை சரியாக புரிந்து கொள்ள தவறி விட்டனர். பிஎஸ்பி கட்சி தான் அதிகபட்சமாக 35 முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பிஎஸ்பியை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை: மாயாவதி வேதனை appeared first on Dinakaran.

Tags : Muslims ,BSP ,Mayawati ,Lucknow ,Bahujan Samaj Party ,UP ,Lok Sabha elections ,
× RELATED மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை...