×

பீகாரில் 7ம் கட்ட தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த தேஜ கூட்டணி

பாட்னா: பீகாரில் கடைசி கட்டமாக நடந்த தேர்தலில் தேஜ கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில்தான் பீகாரில் அந்த கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பீகாரில் கடந்த 2005ம் ஆண்டு முதல் நிதிஷ்குமாருடன் கூட்டணி வைத்து பாஜ ஆட்சி நடத்தி வருகிறது. தேஜ கூட்டணி அமைத்தது முதல் பீகாரில் நடந்த தேர்தல்களில் இந்த கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மோடி அலை ஏற்படுவதற்கு முன்னரே தேஜ கூட்டணி 30க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி வந்துள்ளது. 2014 தேர்தலில் தேஜ கூட்டணி 31 இடங்களை கைப்பற்றியது.

அதன் பின்னர் 2019 தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் 39 இடங்களை கைப்பற்றியது. இதுவரை நடந்த தேர்தல்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ள தேஜ கூட்டணி இந்த தேர்தலில் 30 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்தியா கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் சுயேட்சை வெற்றி பெற்றுள்ளார். ஜூன் 1ம் தேதி பீகாரில் 8 தொகுதிகளுக்கு கடைசி கட்ட தேர்தல் நடந்தது. இதில், 6 தொகுதிகளை ஆர்ஜேடி, காங்கிரஸ், இடது சாரி கூட்டணி கைப்பற்றியது.

இது குறித்து சிபிஐ(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி பொது செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா,‘‘ மக்களவை தேர்தலில் சிபிஐ(எம்எல்) முதல் முறையாக இரண்டு எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் மக்களவை தேர்தலுடன் நடந்த அகியோன் தனி தொகுதிக்கு நடந்த இடைதேர்தலிலும் சிபிஐ (எம்எல்) வெற்றி பெற்றிருக்கிறது’’ என்றார். இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்ஜேடி கட்சி 4 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்த 4 தொகுதிகளில் கடைசி கட்டமாக தேர்தல் நடந்த பாடலிபுத்ரா, ஜெகனாபாத், பக்சர் ஆகிய 3 தொகுதிகள் அடங்கும். 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 3 தொகுதிகளை வென்றுள்ளது. சசாாரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு மறைந்த ஜெகஜீவன் ராமின் மகள் மீரா குமார் தயக்கம் காட்டினார்.அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மனோஜ் குமார் வெற்றி பெற்றுள்ளார். முஸ்லிம்கள் நிறைந்த கிஷன்கஞ்ச், கத்திஹார் தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பூர்னியா தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரசில் சீட் கேட்டிருந்த பப்பு யாதவ் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்.

The post பீகாரில் 7ம் கட்ட தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த தேஜ கூட்டணி appeared first on Dinakaran.

Tags : Teja alliance ,7th phase elections ,Bihar ,Patna ,BJP ,Nitishkumar ,of elections ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசியலில் பரபரப்பு பாஜ...