×

கம்பம் ஆர்ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கூடலூர், ஜூன் 6: சிபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த கம்பம் ஆர்ஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கம்பம் ஆர்ஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் ராம்நகுலன் 96 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், தனுஷ் 94.6 சதவீதம் எடுத்து இரண்டாமிடத்தையும், சாமாஅஞ்சு 93.8 சதவீதம் எடுத்து மூன்றாமிடமும் பிடித்து சாதனை படைத்தனர். இதேபோல் 10ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் ஹெர்தியா 96.2 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், பிரித்திகா 93.8 சதவீதம் எடுத்து இரண்டாமிடத்தையும், தேவகாளி தீக்ஷிதா, ஹரா ஆகிய இரண்டு பேரும் தலா 93.4 சதவீதம் எடுத்து மூன்றாமிடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.

மேலும் 12ம் வகுப்பில் உயிரியல் பாடத்தில் மாணவி இம்மாக் ஜென் பூர்ணா, தமிழ் பாடத்தில் பிரித்திகா,  சஞ்சுகி மது ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கி மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி துணைத் தலைவர் அசோக்குமார், செயல்தலைவர் ஜெகதீஸ், இயக்குநர் விமல்கண்ணன், பள்ளி இயக்குநர் கீர்த்திகா, முதல்வர் ஆனந்தவள்ளி மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்களும் மாணவ,மாணவிகளை வாழ்த்திப் பாரட்டினர்

The post கம்பம் ஆர்ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Polam RR International School ,Koodalur ,CBSC ,CPSC ,Ramnagulan ,Gampam RR International School ,Appreciation ,Dinakaran ,
× RELATED கனமழையால் சிற்றாற்றில்...