×

கலவரம் நடந்த மணிப்பூரில் பாஜ படுதோல்வி

புதுடெல்லி: பாஜ ஆட்சி செய்யும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்டீஸ், குக்கி, நாகா சமூகத்தினரிடையே நடந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மணிப்பூர் மக்களை சந்திக்க செல்லாத மோடி, மணிப்பூர் விவாகரம் குறித்து விவாதிக்க கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே மணிப்பூர் கலவரம் பற்றி பேசினார். மக்களவை தேர்தலில் மணிப்பூரின் இன்னர் தொகுதியில் பாஜ போட்டியிட்டது. காங்கிரஸ் இன்னர், அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாஜ மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பல்வேறு மாநிலங்களுக்கு 2,3 முறை சென்ற பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை.

ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால், தவுபாலில் இருந்து ஜனவரி 14ம் தேதி தொடங்கினார். இந்நிலையில் மணிப்பூரின் இன்னர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் 3,74,017 வாக்குகள் பெற்று, 1,09,801 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜவின் தவ்னோஜாம் பசந்த் குமார் சிங்கை தோற்கடித்தார். இதேபோல் அவுட்டர் மணிப்பூரில் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஆல்பிரட் கங்கம் எஸ் ஆர்தர் 3,84,954 வாக்குகளுடன் 85,418 வாக்குகள் வித்தியாசத்தில் நாகா மக்கள் கட்சி வேட்பாளர் கச்சு திமோதி சிம்கியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

The post கலவரம் நடந்த மணிப்பூரில் பாஜ படுதோல்வி appeared first on Dinakaran.

Tags : BJP ,Manipur ,New Delhi ,Meiteis ,Kuki ,Naga ,Modi ,Parliament ,
× RELATED அதீத நம்பிக்கையில் இருந்த பாஜவுக்கு...