×

பாஜ கூட்டணியை சரிவுக்கு கொண்டு சென்ற அண்ணாமலை: இணையவாசிகள் கிண்டல்

சென்னை: 2014ம் ஆண்டு 2 இடங்கள், 2019ம் ஆண்டு 1 இடம், 2024ம் ஆண்டு பூஜ்ஜியம் என பாஜ கூட்டணி போட்டியிட்ட நாடாளுமன்ற தேர்தல்களில் படிப்படியாக சரிந்துள்ளது. பாஜ கூட்டணியை பூஜ்ஜியமாக்கிய பெருமை அண்ணமலையையே சேரும் என இணையவாசிகள் பலர் கிண்டல் செய்து வருகின்றனர். 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது தமிழ்நாட்டில் திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளே இருக்காது என தொடர்ந்து அண்ணாமலை பேசி வந்தார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் அண்ணாமலையை வாய் அடைக்க செய்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி முழுவதமாக வெற்றி பெற்று சாதனை படைத்தது ஒருபுறம் இருந்தாலும், கடந்த 2014 தேர்தலில் 2 இடங்களும், 2019ல் 1 தொகுதியும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காமல் படுதோல்வி அடைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை பூஜ்ஜியமாக்கிய பெருமை அண்ணாமலையயே சேரும் என அவரை இணைய வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். 2014ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக, மதிமுக இடம்பெற்றது. அதில் தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணியும், கன்னியாகுமரியில் பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷணன் வெற்றி பெற்றனர்.

2019ல் அதிமுக, பாஜ, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றன. அதில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஒ.பி.ரவிந்தரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். இந்த முறை பல்வேறு முயற்சிகள் எடுத்தும், மத்திய அமைச்சர், ஆளுநர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கியும் 21 இடங்களில் டெப்பாசிட் கூட பெற முடியாமல் அனைத்து தொகுதிகளிலும் பாஜ தலைமையிலான கூட்டணி படு தோல்வி அடைந்துள்ளது.

The post பாஜ கூட்டணியை சரிவுக்கு கொண்டு சென்ற அண்ணாமலை: இணையவாசிகள் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP alliance ,Chennai ,
× RELATED அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு...