×

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: இமயமலை பயணத்தை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டி:  நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள எனது அருமை நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள். மற்றொரு நண்பர் சந்திரபாபு நாயுடு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும், என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்டிஏ ஆட்சி அமைக்க இருக்கிறது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். டெல்லியில் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்வுக்கு செல்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு நான் சென்றேன். அருமையாக இருந்தது. இந்தப் பயணத்தின் போது ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு புது அனுபவம் எனக்கு கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : K. Stalin ,Rajinikanth ,Modi ,Chennai ,Delhi ,Himalayas ,Chennai Airport ,
× RELATED வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை...