×

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகள்

விழுப்புரம்: விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த மாதம் காலமானார். இதனால் மக்களவை தேர்தலுடன் இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு தற்போது நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு 72,188 வாக்குகளும், அதிமுகவிற்கு 65,825 வாக்குகளும், பாமகவிற்கு 32,198 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதிமுகவைவிட 6,363 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது. இதனால் இடைத்தேர்தலில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.

The post இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகள் appeared first on Dinakaran.

Tags : DMK ,Vikravandi ,Villupuram ,Wickrevandi ,MLA Pugajendi ,Lok Sabha ,Election Commission ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்!