×

குரூப்-4 தேர்வு வினாத்தாள் குமரிக்கு இன்று வந்தது: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. அரசு பணிகளில் காலியாக உள்ள 6244 இடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஜனவரி 30ம் தேதி வெளியிடப்பட்டது. வரும் 9ம் தேதி ஞாயிற்றுகிழமை இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

ஸ்டெனோ டைப்பிஸ்ட், கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் மற்றும் தமிழ்நாடு வன சார்நிலை பணி அடங்கிய தமிழ்நாடு வனத்துறையில் உள்ள வன காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வன காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில் தேர்வுக்கான வினாத்தாள்கள் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல அலுவலகத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post குரூப்-4 தேர்வு வினாத்தாள் குமரிக்கு இன்று வந்தது: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : KUMARI ,Nagarko ,Tamil Nadu Civil Servants Selection Board ,Rifle Police Protection ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு;...