×

திமுக, அதிமுகவுக்குத்தான் போட்டி; தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வேலையே இல்லை: துரை வைகோ பேட்டி

மீனம்பாக்கம்: திமுக, அதிமுகவுக்குத்தான் போட்டி, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வேலையே இல்லை என சென்னை விமான நிலையத்தில் மதிமுக செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக முதன்மை செய லாளர் துரை வைகோ, திருச்சியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: இமாலய வெற்றியை பெற்றுத்தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியால் தொண்டர்கள் மற்றும் வைகோ மகிழ்ச்சி அடைந்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள் நலத்திட்டங்கள் ஏழை, எளிய மக்களை சென்றடைவதால் தமிழ்நாடு, புதுவை உட்பட 40 தொகுதிகளில் இமாலய வெற்றியை மக்கள் தந்துள்ளனர். திருச்சி தொகுதி மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் திருச்சி தொகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக, பாஜக மற்றும் பிற அரசியல் கட்சி களின் வேறுபாடு, சித்தாந்தங்களை கடந்து திருச்சி தொகுதி மக்கள் நலனுக்காக பாடுபடுவேன்.

எம்ஜிஆர் கண்ட இயக்கம் அதிமுக. இக்கட்சியும் திராவிட கட்சிதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிடக் கட்சிகள் இடையே மட்டுமே போட்டி. அதிமுகவுக்கு போட்டி திமுகதான். இதுபோல் திமுகவுக்கு போட்டி அதிமுகதான். இங்கு பாஜகவுக்கு வேலையே இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமே இல்லை. இவ்வாறு துரைவைகோ கூறியுள்ளார். வரவேற்பின்போது துரை வைகோவுக்கு அணிவிப்பதற்காக ஆளுயர மாலைகள், மலர்கிரீடங்களை கட்சியினர் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவர் அவைகளை அணிவிக்காமல் தவிர்த்தார். அதேநேரத்தில் தொண்டர்கள், கட்சியினர் பலர் துரை வைகோவுடன் சேர்ந்து செல்பி எடுக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். இதை ஏற்றுகொண்ட அவர், தொண்டர்களிடம் செல்போன் வாங்கி அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

The post திமுக, அதிமுகவுக்குத்தான் போட்டி; தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வேலையே இல்லை: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : ADAMUGA ,BAJGAV ,DIMUKA ,KUTHAN RIBATI ,BAJAGAV ,NADU ,MINISTER ,DURAI WAIGO ,CHENNAI AIRPORT ,Saya Lalar Durai ,Dimuka Alliance ,Trichy ,Adamugawa ,BJP ,Tamil Nadu ,Durai Vigo ,Dinakaran ,
× RELATED அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை: டிடிவி தினகரன் பேட்டி