×

சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது: உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மாவட்டத்துக்கு உட்பட அண்ணாநகர்,அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம் ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் மற்றும் சூளைமேடு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நண்பர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மும்பையில் இருந்து 3 பேர் போதை மாத்திரைகள் வாங்கிக்கொண்டு ரயில் மூலம் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வருவதாக கிடைத்த தகவல்படி, அண்ணாநகர் மதுவிலக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது போதையில் தள்ளாடியபடி வந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் 2 ஆயிரம் போதை மாத்திரைகள் இருந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து அண்ணாநகர் மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த பரத்(23), கிண்டி மடுவின்கரை பகுதியை சேர்ந்தசஜன்குமார் (24), இவரது கூட்டாளி ஜமால் அகமது (28) என்பதும் இவர்கள் மும்பை, கொல்கத்தா, ஆந்திரா உட்பட பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு போதை மாத்திரைகள் வாங்கிவந்து 3 மாதங்கள் பதுக்கி வைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வெளி மாவட்டங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து அந்த பணத்தில் ஜாலியாக வாழ்ந்துள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 2 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

The post சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது: உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ambalam ,Annanagar ,Arumbakkam ,Nitakarai ,Tirumangalam JJ Nagar ,Nolampur ,Choolaimedu ,Annanagar district ,Mumbai ,
× RELATED அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில்...