×

மராட்டிய துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை: மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மராட்டிய துணை முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநில தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்கிறார். மக்களவை தேர்தலில் உ.பி. மாநில மேலிட பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டிருந்தார் .

மகாராஷ்டிராவில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறாததற்கும் தோல்விக்கும் முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன். பேரவைக்கு முழுநேரம் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கட்சியின் உயர்மட்டத் தலைமையிடம் கேட்டுக் கொள்கிறேன். அவரது உத்தரவுப்படி அடுத்தகட்ட பணிகளை செய்வேன் என்று துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேட்டி அளித்துள்ளார்.

பாஜகவின் தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பாஜக பெரியவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார். தனது ராஜினாமாவை ஏற்குமாறு பாஜக தலைமையிடம் கேட்டுக் கொண்டார். பெரும்பான்மை இடங்களில் மீண்டும் பாஜகவை வெற்றி பெற கடுமையாக உழைப்பேன் என்றார்.

The post மராட்டிய துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் தேவேந்திர பட்னாவிஸ் appeared first on Dinakaran.

Tags : Devendra Fadnavis ,Deputy Chief Minister of ,Maharashtra ,Mumbai ,Lok Sabha ,Uttar Pradesh ,
× RELATED மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில்...