×

அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம் …மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. பிரேமலதா அறிக்கை

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணிக்காக உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முதற்கண் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில், பல்வேறு கட்டமான சவால்களை எதிர்த்து, ஒரு கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று அசைக்க முடியாத ஒரு சக்தியாக, இந்த கூட்டணியை மாற்றிய அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வாக்களித்த பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேமுதிக போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கு தேமுதிகவின் பொதுச் செயலாளராக நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்! கடைசி வரை வீரமாகப் போராடி, தேர்தல் களத்தில், ஒரு சரித்திரத்தை படைக்கும் அளவில் நாம் போட்டியிட்டு இருக்கிறோம். அனைத்து வேட்பாளர்களும் இந்த தோல்வியை படிக்கல்லாக மாற்றி வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக உழைத்து, 2026 நமது இலக்காக இப்பொழுதிலிருந்தே உழைத்து பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்த தேர்தலில் வாக்களித்த பொது மக்களுக்கும் இந்த கூட்டணிக்காக, உழைத்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்பகுதி திராவிட கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் அண்ணன் எடப்பாடி அவர்களுக்கும் அனைத்து முன்னாள் அமைச்சர் பெருமக்களுக்கும், உறுப்பினர்கள் மற்றும் இந்த கூட்டணிக்காக உழைத்த அனைவருக்குமே தேமுதிக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாளை நமதே! அரசியலில் வெற்றியும் தோல்வியும் அனைவருக்கும் சகஜமான ஒன்று என்பதை ஏற்றுக்கொண்டு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து அடுத்த வெற்றிக்காக நாம் தயாராவோம்,”என்று குறிப்பிட்டுள்ளார்.

The post அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம் …மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. பிரேமலதா அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Maheson ,Premalatha ,Chennai ,National Progressive Dravida ,Kazhagam ,General ,Premalatha Vijayakanth ,2024 parliamentary elections ,DMK ,general secretary ,AIADMK ,
× RELATED அரசுக்கு பிரேமலதா கோரிக்கை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்