×

தன்னை ராஜா என அழைக்கும் அமித்ஷா ஒவ்வொரு கதவையும் தட்டி கையேந்தி நிற்கிறார் : காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

புதுடெல்லி :தன்னை ராஜா என அழைக்கும் அமித்ஷா ஒவ்வொரு கதவையும் தட்டி கையேந்தி நிற்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்து பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில்,மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், “அரசியல் சாணக்கியர் என்று சொல்லிக் கொண்ட அமித் ஷா, கடைசியில் தான் விரித்த வலையிலேயே மிகவும் மோசமாக மாட்டிக்கொண்டார். ஒவ்வொரு அடியிலும் பொதுமக்களை முட்டாளாக்கி, மிகப்பெரிய முதலாளிகளுக்கு சவால் விடும் ராஜாக்களின் ராஜா, இன்று கிண்ணத்துடன் கையேந்தி பல கதவுகளைத் தட்டி, எம்.பி.,க்களை நன்கொடையாகத் தேடிக் கொண்டிருக்கிறார்.” என்று விமர்சித்துள்ளார்.

The post தன்னை ராஜா என அழைக்கும் அமித்ஷா ஒவ்வொரு கதவையும் தட்டி கையேந்தி நிற்கிறார் : காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : AMITSHA ,JAIRAM RAMESH ,CONGRESS PARTY ,NEW DELHI ,general secretary ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்