×

சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் எக்ஸ் பதிவு

சென்னை: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அவர்களது வெற்றி பாராட்டத்தக்க ஒன்று. ஆணவமும், அரைவேக்காட்டுத்தனமும் நிரம்பியிருந்த ஜெகன்,மோடியோடு சேர்ந்துகொண்டு ஆடிய தப்பாட்டத்திற்கான தண்டனையினை பெற்றுள்ளார்.

இந்திய அரசியலில் ஒரு மகத்தான மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பினை காலம் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கியுள்ளது. இந்திய அரசியலில் நிறைந்த அனுபவம் பெற்ற அவர் தன்னிடம் இருக்கும் துருப்புச்சீட்டுகளை சரியாகவே பயன்படுத்துவார் என்று நம்புகிறோம்.

காலை தொலைக்காட்சிகளில் அவர் மோடிக்கு ஆதரவளிக்க இருப்பதாக செய்தி வருகிறது. அது உண்மையானால் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு வேண்டுகோள்.
ஆந்திராவின் முதலமைச்சராக அவரது மகன் நரேஷ் அவர்களை அமர்த்திவிட்டு சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக உள்துறை அமைச்சராக பொறுப்பேற்கவேண்டும்.

தென் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்து தென் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். பிரதமர் வட இந்தியராக இருக்கும்போது தென்னிந்தியாவின் ஒரு முக்கிய தலைவர் துணை பிரதமராக இருப்பது தென்னிந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதற்கான முன்னெடுப்பை செய்யவேண்டும்

The post சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் எக்ஸ் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Deputy Prime Minister ,Peter Alphonse X ,CHENNAI ,Andhra Pradesh ,Jagan ,Modi ,
× RELATED ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு...