×

மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக தலைமையில் அமையவுள்ள புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமையவுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால் கூட்டணி ஆட்சி அமைகிறது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி; பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு வேலையில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை மக்கள் புறிக்கணித்துள்ளனர். பா.ஜ.க. 240 இடங்களில் மட்டுமே வென்று பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும். சுயமரியாதை உள்ள எந்த தலைவரும் கண்டிப்பாக ராஜினாமா செய்துவிடுவர்; பதவி நீக்கும் வரை காத்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை பிரதமர் மோடி வழங்கவில்லை.

பிரதமர் மோடி தோல்வி பயத்தால் தேவையில்லாத பல விஷயங்களை பிரசாரத்தின் போது பேசினார். பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு இனி வாய்ப்பில்லை எனவும் கூறினார்.

The post மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி appeared first on Dinakaran.

Tags : Modi ,Subramanian Swami ,Delhi ,BJP ,National Democratic Alliance ,Lok Sabha ,
× RELATED இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை