×

இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: வைகோ

சென்னை: இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை தேர்தல் மூலம் மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளிலும் வெற்றி முரசு கொட்டி, தமிழ்நாடு திராவிட பூமி என்பதை தேர்தல் நாட்டுக்கு உணர்த்தி உள்ளது. மோடி ஆட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்; பிரதமர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை மோடி இழந்துவிட்டார். பா.ஜ.க.வின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைந்த இந்தியா கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெற்று மகத்தான வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.

The post இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: வைகோ appeared first on Dinakaran.

Tags : Hinduism ,Tamil Nadu ,Wiko ,Chennai ,Secretary General ,Dravitha Bhumi ,Waiko ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்...