×

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,800க்கு விற்பனை


சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,725க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. கடந்த மாதம் 29ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.54,200க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. 30ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.53,840 ஆக குறைந்தது. 31ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல் சவரன் ரூ.53,840க்கு விற்பனையானது.

1ம் தேதி சவரன் ரூ.53,680க்கு விற்கப்பட்டது. 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் 3ம் தேதி தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. தங்கம் கிராமுக்கு 44 குறைந்து ஒரு கிராம் ரூ.6,666க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் ரூ.53,328க்கு விற்பனையானது. அதை போலவே இன்று சவரனுக்கு 160 குறைந்து ரூ.53,800க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச விலையை பொருத்தே இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்தவதேச அளவில் வெள்ளியின் விலை உயரலாம், குறையலாம். வெள்ளியின் கதை தங்கத்தையின் தேவையையும் தாண்டி செல்லும். ஏனெனில் வெள்ளி ஒரு முக்கியமான தொழில்துறை உலோகமாகும், இந்நிலையில் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.30 குறைந்து ரூ.96.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ பார் வெள்ளியின் விலை ரூ.96.200 க்கு விற்பனை ஆகிறது.

The post ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,800க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு...