×

வாக்கு எண்ணும் மையத்தில் மருத்துவ முகாம்

 

தேனி, ஜூன் 5:தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடந்தது. மைய வளாகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு மருத்துவக் குழுவினர் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சிறு உபாதைகளுக்கு தேவையான மருந்துகளுடன் கூடிய ஏற்பாடுகளுடன் மருத்துவ முகாமை நடத்தினர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்திருந்த அலுவலர்கள் முகவர்கள் உள்ளிட்டோரில் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட சிறு உபாதைகளுக்கு இம் முகாமில் மருந்துகளை வாங்கி சென்றனர்.

The post வாக்கு எண்ணும் மையத்தில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Koduvilarpatti ,Dinakaran ,
× RELATED தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்