×

மரம் தலையில் விழுந்ததில் மூதாட்டி பலி

 

பந்தலூர், ஜூன் 5: பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ பகுதியில் மரம் உடைந்து தலையில் விழுந்ததில் மூதாட்டி பலியானார். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டம் சேரம்பாடி டேன்டீ சரகம் இரண்டு பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (69). இவர், நேற்று காலை சேரங்கோடு இரும்புபாலம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த வாழை மரத்தில் வாழை தண்டை சமையலுக்காக வெட்டி எடுத்த போது அருகில் இருந்த காய்ந்த மரம் ஒன்று எதிர்பாராத விதமாக உடைந்து பாப்பாத்தி தலையில் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாப்பாத்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசார் விசாரிச்சது வருகின்றனர்.

 

The post மரம் தலையில் விழுந்ததில் மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Serambadi Dandee ,Papapathy ,Tandee Charakam ,Tamil Nadu ,Pandalur ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED நெல்லியாளம் நகராட்சியில் தூய்மை...