×

கொங்கு மண்டலம் திமுக கோட்டை என நிரூபித்து உள்ளோம்

 

கோவை, ஜூன் 5: கொங்கு மண்டலம் திமுக கோட்டை என்பதை நிருபித்து உள்ளதாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார். பொள்ளாச்சி வாக்கு எண்ணும் மையத்தில் நிருபர்களிடம் ஈஸ்வரசாமி கூறுகையில், “தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் செய்துள்ள சாதனைகள் காரணமாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளோம்.

இது திராவிட மாடல் ஆட்சியின் சான்றாக விளங்குகிறது. தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்று ஒன்றாக நிறைவேற்றப்படும்.  குறிப்பாக, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குனியமுத்தூர், உடுமலை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும்.

திமுக அரசு பெண்களுக்கான அரசாக இருந்து வருகிறது. முதல்வர் மகளிர் உரிமை திட்டம், இலவச பேருந்து திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், நான் முதல்வன் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இது கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றுள்ளது. மேலும், கொங்கு மண்டலம் திமுக கோட்டை என மீண்டும் நிரூபித்து உள்ளோம்’’ என்றார்.

The post கொங்கு மண்டலம் திமுக கோட்டை என நிரூபித்து உள்ளோம் appeared first on Dinakaran.

Tags : Kongu ,DMK ,Coimbatore ,Easwarasamy ,Pollachi Parliamentary Constituency ,Pollachi ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது