×

தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியதே வெற்றிக்கு காரணம்

 

தஞ்சாவூர், ஜூன் 5: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தோம். அதனால் தான் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதியில் வெற்றி கிடைத்துள்ளது என தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் முரசொலி தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் இருந்து பெற்றுக்கொண்ட பிறகு முரசொலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது தமிழகத்தில் நடைபெற்று வரும் மூன்றாண்டு சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு கேட்டோம். மக்கள் எங்களை நம்பி தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளும் வெற்றியை கொடுத்துள்ளனர்.

அந்த வெற்றியை தமிழக முதல்வர் மற்றும் இளைஞரணி செயலாளருக்கு சமர்ப்பிக்கிறோம். மேலும் எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த இந்தியா கூட்டணி நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் ஒன்றிய செயலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியதே வெற்றிக்கு காரணம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Thanjavur ,Tamil Nadu ,Tanjore ,Dinakaran ,
× RELATED தொழில் நஷ்டத்தை தவிர்க்க ஆழ்கடல்...