×

பொன்னமராவதி பகுதியில் நெல் அறுவடை பணிக்கு இயந்திரம் தட்டுப்பாடு

 

பொன்னமராவதி, ஜூன் 5: பொன்னமராவதி பகுதியில் நெல் கதிர் அறுவடைப் பணிக்கு இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசின் வேளாண்மைதுறை தட்டுப்பாடின்றி நெல் அறுவடை இயந்திரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவ ட்டம், பொன்னமராவதி பகுதியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல் அறுவடை இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். நெல் நடவுப்பணிக்கு, களை எடுக்க, நெல் அறுவடைப்பணிக்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படும் விவசாயிகள் இப்போது அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் இயந்திரம் மூலமே அறுவடை செய்கின்றனர். இதற்கு தனியார் இயந்திரங்களை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. மேலும் அந்த இயந்திரங்களும் கிடைக்காமல் அலைய வேண்டிய நிலை உள்ளது.

அவ்வாறு கிடைத்தாலும் அதிக கட்டணம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே வேளாண்மைத்துறை மூலம் குறைந்த கட்டணத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கவேண்டும், மேலும் பொன்னமராவதியில் விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு கிடைக்கும் வகையில் அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என பொன்னமராவதி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதி பகுதியில் நெல் அறுவடை பணிக்கு இயந்திரம் தட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Agriculture Department of Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் உலக ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி